Monday, May 16, 2011

என் இனிய நண்பர்களே, இந்த இனிய தருணத்தில் என்னுடைய கன்னி தமிழ் பின்னூடத்தை பதிவு செய்யவதில் பெருமை அடைகிறேன், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்களுடன் நம்முடைய உலக கோப்பை இறுதி போட்டி கண்ட நினைவை பதிவு செய்ய விரும்பிகிறேன். காலத்தால் அழியாத அந்த நினைவை பதிவு செய்யவது இன்றி அமையாதது. "வரலாறு முக்கியம் அமைச்சரே".

ஒரு ஊர்ல (குர்நீ) ஒரு அடுக்குமாடி குடியிருபில ஒரு குடும்பம் குதுகலமா கும்மி அடிசிகிட்டு இருந்துச்சு.. கூட சேர்ந்து கும்மி அடிக்க வீரபாகு குடும்பம் சேர்ந்துச்சு அப்புறம் முன் எச்சரிக்கை முனுசாமி குடும்பம் சேர்ந்துது அப்புறம் இந்த குரூப்-அ அலர்ட் ஆக்க வந்தாரய்ய வந்தாரு அலர்ட் அலர்ட் ஆறுமுகம். இப்படியாக இந்த நாலு குடும்பமும் சேர்ந்து இந்தியா வரலாறு படைக்க போகும் கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டி போக்க தயரானங்க. 

எல்லாரும் ஏப்ரல் 1 -ம் தேதி கூடினாங்க. (பாருங்க பய புள்ளைக முட்டாள்கள் தினதன்னைக்கு கூடியருக்கு). எல்லாரும் வீட்லேர்ந்து கூடஞ்சொரு கட்டி கிட்டு வந்து புல் கட்டி கட்டிட்டு தூங்க தயாராகும்போது எல்லாருக்கும் அதிசயமாக சூர்யா தம்பி தூங்கிடாறு.. அப்பவே இந்தியா வெற்றி பெற போகுதுன்னு பட்சி சொன்னமாதிரி இருந்துச்சு. ஒரு பெரிய தடை விலகின சந்தோஷத்துல நம்ம பய புள்ளைக சீட்டு விளையாட ஆரம்பிட்சசு. என்ன விளையாட்டுன்னு கேகுறீங்களா? சுத்த தமிழ்ல்ல சொல்லனும்ன இறுதி தீர்ப்பு (அ) நீதி (அ) ஜட்ஜுமென்ட் (இதுவும் தமிழ் தாங்க) ஆட்டம். ஆனா ஆட்டம் என்ன ஒருதனவிட ஒருத்தன் மிஞ்சனும் அதுதான் குறிக்கோள். இந்த ஆடட்டதுல வழக்கம் போல அப்பிரநியான மெய் தோல்விய தலுவிட்டறு. (இதுக்கு எதிர்த்து கமெண்ட் எழுதறவங்க ஒழுங்கு நடவடிக்கை குழுவ சந்திக்க வேண்டிவரும்). 

இப்படியாக அந்த ஆட்டம் நள்ளிரவு 2 மணிக்கு முடிய சபை கலைக்க பட்டு பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான இடத்திருக்கு அனுப்ப பட்டனர். (தூங்கபோய்தாங்கப்பா!)  அதன் பின் ஆண் சிங்கங்கள் மட்டையுடன் வீர விளையாட்டுக்கு தயாராயினர். (நீங்க எதாவது மாடு பிடிக்க போறங்கன்னு தப்ப நெனைச்ச நான் பொறுப்பில்லை) அவங்க விளையாடினது நாலு செவுதுக்குள்ள மேசை டென்னிஸ். அலர்ட் ஆறுமுகம் முன் எச்சரிக்கை முனுசாமி ஒரு அணியாகவும் வீரபாகுவும் எமோஷனல் ஏகாம்பரம் எதிர் அணியாகவும் விளையாடினர், அனல் பறக்க சர்விசெகள் போடா பட்டன. பார்வையாளர்கள் கூட்டம் அலைகடளன வர வில்லைன்னு சொல்ல வந்தேன். வீரபாகு தன் நயவஞ்சக ஆட்டத்தால் எதிர் அணியினரை தோற்கடித்தார்.  அந்த ஆட்டம் அதிகாலை 3 மணி அளவில் முடித்து வைக்க பட்டது. 

இறுதி ஆடம் தொடங்க இன்னும் 30 நிமிடங்களே உள்ள நிலையில் அனைவரும் தூங்க ஆயத்தமாக லக்ஷ்மி போட்டு வைத்திருந்த தேனீர் நினைவுக்கு வர அதை அனைவரும் பருகி இளைப்பறி கொண்டிருக்கும் வேளையில் முன் எச்சரிக்கை முனுசாமியின் இறுதி ஆட்டத்தின் எதிர்பார்புகளை கேட்டு விளித்து கொண்டனர். அவருடைய எதிர் பார்ப்புகளை கடவுளே கேட்டவுடன் தலை சுற்றிபோவர், ஆனால் நம்ம அலர்ட் ஆறுமுகம் தன்னுடைய சமயோசித புத்தியால் எதிர் பார்ப்பை சமாளித்து மு மு வை மனம் தளர விடாமல் கடைசி வரை வழி நடத்தி சென்றார். எமோஷனல் ஏகாம்பரம் வீரபாகுவை ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை  சமாளித்து இந்தியா வெற்றி பெரும் என்ற தனது கருத்தை நிலை நாட்டினார். ஆட்டத்தின் கடைசி அத்தியாயங்களில் மு மு மற்றும் வீரபாகுக்கு இந்தியா ஜெயிக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது. அதற்க்கு பெரிதும் முயற்சித்து தனது நாட்டுபற்றை வெளிபடுத்தினார் அலர்ட் ஆறுமுகமும் எமோஷனல் ஏகம்பரமும். 

காலை விடிய தொடங்கியதும் பெண்களும் குழந்தைகளும் கோதாவில் குதித்தனர். காலை உணவு ஐரோப்பிய முறைப்படியும் மதிய உணவு மெக்சிகன் முறைப்படியும் பரிமாற பட்டன. அனைவரும் வயிறார உன்று வாயார இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்த அந்த தினத்தையே தங்கள் 4 குடும்பங்கள் இணைந்த இனிய நாளாக அறிவித்தனர். பின்னர் அது இனிய சங்கமமாக உருவெடுத்து வரலாறு படைத்தது தனி கதை. ஆனால் விதை போடபற்றது இந்த நன் நாளில்தான். 

இந்த சந்திப்பின் உச்சகட்டமாக பேசப்பட்டவை பின் வருவன

1 மு மு வின் கமெண்டுகள் மற்றும் எதிர் பரப்புகள்
2 அலர்ட் ஆறுமுகத்தின் சவாலே சமாளி உத்திகள்
3 தம்பி சூர்யா நேரத்துக்கு தூங்கி ஒத்துளைத்தமை
4  ஜட்சுமென்ட் விளையாட்டின்போது சுபாமதி படைத்த சாதனை, லாவகமாக வீரபாகுவை சமாளித்தது.
5 சிறிய மற்றும் பெரிய குழந்தைகள் அனைத்தும் ஒன்றாக கும்மி அடித்தது

இந்த பின்னுட்டம் யார் மனதையும் புண் படுத்த அல்ல என்பதை சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

இதில் விடுபட்ட மற்ற விஷயங்களை உறுபினர்கள் கமெண்ட் பகுதியில் தெருவிக்கலாம். 

நன்றி! நன்றி!! நன்றி!!!

இப்படிக்கு
உங்கள் மெய் அன்பன்.


3 comments:

  1. I still remembered that we (including you) ate cake prepared by Uma (Mrs Alert Arumugam).

    Lakshmi போட்ட தேனீர் மட்டும் ஞாபகம் வருதோ!!!!??

    "வரலாறு முக்கியம் அமைச்சரே".

    ReplyDelete
  2. a) Hatrick for Ashwin and Zaheer.
    b) Cricket Insurance when we lose match.
    c) Dis-qualify Sreesanth and Harbhajan.
    d) Triple Hundred for Sehwag.
    e) Life for Tendulkar, even when he is out for sure.
    and many more ridiculous expectations.. I believe, the team was in the happy mood otherwise BraveKing (Veera), TruthKing (Mei) and AlertKing (Positive) would have chucked out the RuleKing (Myself).

    ReplyDelete
  3. Few corrections..

    1. Along with tea, we had the wonderful cake prepared by Uma.

    2. It was not pot-luck, we actually ordered pizza outside and adventurous ride in the quest of fried-rice. Thalaivar knocked one of the restaurant place and demanded them to open :) we ended up getting in pretty decent place in the end.

    Thanks Raj for posting the details :)

    Nayavanjaga Veerabaagu.. see you in next blog :)

    ReplyDelete